தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 255 வழக்குகளுக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 255 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான இளவழகன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நீதிபதிகள் சந்திரன், கோபிநாதன், விஜயகுமார், ஜெகதீசன், வினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளாக 2,017 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
255 வழக்குகளுக்கு தீர்வு
இம்முகாமில் நீதிபதிகள் செங்கமலச்செல்வன், பிரபாதோமாஸ், அருண்குமார், பூர்ணிமா, ஆயிஷ்பேகம், வக்கீல்கள் முகில்வண்ணன், திருஞானசம்பந்தம், வேலவன், தன்ராஜன், மணிவண்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர். இதன் முடிவில் 255 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.5 கோடியே 91 லட்சத்து 87 ஆயிரத்து 807-க்கு தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story