நாமக்கல்லில் இரவு 8 மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 15 கடைகளுக்கு அபராதம் கலெக்டர் நடவடிக்கை
நாமக்கல்லில் இரவு 8 மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 15 கடைகளுக்கு அபராதம் கலெக்டர் நடவடிக்கை
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இரவு 8 மணிக்கு மேல் மருந்து கடைகளை தவிர அனைத்து வகையான கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நாமக்கல் நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு 8 மணிக்கு மேலும் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி சில கடைகள் திறந்து இருப்பதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது ஊரடங்கு உத்தரவை மீறி இரவு 8 மணிக்கு மேல் திறந்திருந்த சிறு கடைகள், ஓட்டல்கள், சாலையோர கடைகள் என மொத்தம் 15 கடைகளுக்கு ரூ.17ஆயிரத்து 500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் உடனடியாக கடைகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது தாசில்தார் தமிழ்மணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story