ஓய்வூதியம் பெறுவோர் குறைகளை தீர்க்க ‘பென்சன் அதாலத்' - மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 July 2021 12:25 AM IST (Updated: 11 July 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை எடுக்க விரும்புபவர்களுக்கான குறைதீர்க்கும் முகாம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சென்னை, 

தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை எடுக்க விரும்புபவர்களுக்காக, குறைதீர்க்கும் முகாமை வருகிற 20-ந்தேதி மாலை 3.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடத்த உள்ளது.

சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை pension.rochn1@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரியில் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பவேண்டும். இவ்வாறு அனுப்புபவர்கள் 'பென்சன் அதாலத்' என்று குறிப்பிட்டு, அதில் தங்களுடைய பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடவேண்டும்.

இணையவழியில் நடக்கும் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொள்வதற்கான ‘லிங்' அதாவது இணைப்பு, ஓய்வூதியதாரர்கள் கொடுத்த இணையதள முகவரிக்கு அல்லது தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். மேற்கண்ட தகவல் மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 (சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலம்) ரிதுராஜ் மேதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story