ஸ்மார்ட் திட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு


ஸ்மார்ட் திட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
x
தினத்தந்தி 11 July 2021 12:26 AM IST (Updated: 11 July 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் திட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

மதுரை
மதுரை நகரில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையம் விரிவாக்கம், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகள் சீரமைத்தல், பாதாள சாக்கடை பணிகள், பழைய சென்டிரல் மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன காப்பகம், குன்னத்தூர் சத்திரத்தில் நடைபெறும் கட்டுமான பணிகள் என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி நடைபெறும் ஸ்மார்ட் திட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேற்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தளவாய் அக்ரகாரம் தெரு மற்றும் கோவிலை சுற்றியுள்ள உள்ள மழைநீர் சேமிப்பு திட்ட பணிகள், வாகன வாகப்பகம், குன்னத்தூர் சத்திரம், பூங்கா ஆகிய பகுதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஆயுத்த வேலைகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story