மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுரண்டை:
சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் போலீசார், சுரண்டை பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வழிமறித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், நெல்லை டவுனைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சோலையப்பன் (22), சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவில் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் வீர செந்தில் (30) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story