ஹாசனில் கிராம மக்களை அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது


கூண்டில் சிக்கிய சிறுத்தையை படத்தில் காணலாம்.
x
கூண்டில் சிக்கிய சிறுத்தையை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 11 July 2021 1:57 AM IST (Updated: 11 July 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.

ஹாசன்: ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகாவில் உள்ள பொம்மனஹள்ளி, அக்குண்டா, சித்தரஹள்ளா, சங்கரனஹள்ளி உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால் கிராம மக்கள் பீதியில் இருந்து வந்தனர். இந்த நிலையில், மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 

அதன்படி வனத்துறையினர், அக்குண்டா கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜுனசாமி என்பவரின் தோட்டத்தில் 3 நாட்களுக்கு முன்பு இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். இந்த நிலையில் அந்த இரும்பு கூண்டில் நேற்று சிறுத்தை சிக்கியிருந்தது. இதுபற்றி அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து கூண்டில் சிக்கிய சிறுத்தையை, கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து சென்றுவிட்டனர். தொடர்ந்து அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story