சேலம் மாவட்டத்தில் புதிதாக 180 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 180 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 180 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 191 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று சற்று குறைந்தது. அதன்படி புதிதாக 180 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.
சேலம் மாநகராட்சி பகுதியில் 28 பேருக்கும் கொளத்தூரில் ஒருவருக்கும், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடியில் தலா 3 பேருக்கும், மேச்சேரி, நங்கவள்ளியில் தலா 5 பேருக்கும், எடப்பாடியில் 6 பேருக்கும், ஓமலூர், சேலம் ஒன்றிய பகுதிகளில் தலா 7 பேருக்கும், கொங்கணாபுரத்தில் 9 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது.
2,115 பேருக்கு சிகிச்சை
இதேபோல் அயோத்தியாப்பட்டணத்தில் ஒருவரும், ஆத்தூர், பனமரத்துப்பட்டி, வாழப்பாடியில் தலா 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிக சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது 2 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
Related Tags :
Next Story