இறந்த காட்டுயானையின் உடல் பரிசோதனை
இறந்த காட்டுயானையின் உடல் பரிசோதனை
கூடலூர்
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காயத்துடன் சுற்றித்திரிந்த ஆண் காட்டுயானையை கடந்த மாதம் 17-ந் தேதி கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அபயாரண்யம் முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைத்தனர்.
தொடர்ந்து காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நேற்று முன்தினம் இரவில் காட்டுயானை திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு மரக்கூண்டுக்குள் இறந்த நிலையில் கிடந்த காட்டுயானையின் உடலை கிரேன் உதவியுடன் வனத்துறையினர் வெளியே எடுத்தனர்.
பின்னர் கால்நடை டாக்டர்கள் ராஜேஷ்குமார், பாரத்ஜோதி உள்ளிட்ட குழுவினர் காட்டுயானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். முக்கிய உடற்பாகங்களை சேகரித்தனர். தொடர்ந்து உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து கால்நடை டாக்டர்கள் கூறுகையில், நீண்ட காலமாக காயம் இருந்ததால் உடலின் உள் உறுப்புகள் மிகவும் பலவீனமடைந்தது. இதனால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு காட்டுயானை உயிரிழந்துள்ளது என்றனர்.
Related Tags :
Next Story