ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கோத்தகிரி
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆன்லைன் சூதாட்டம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கைக்காட்டியில் உள்ள கூடஹல்லா கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ் மன்னன். இவரது மகன் சசிக்குமார் என்ற அஜித்(வயது 24). கோடநாடு அருகே உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கீதா(24). இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அஜித்துக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மனைவியுடன் தகராறு
அதன்படி நேற்று முன்தினம் இரவிலும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென வீட்டை விட்டு அஜித் வெளியே கிளம்பினார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் தேடி சென்றனர்.
அப்போது கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையோரத்தில் உள்ள மரத்தில் அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோத்தகிரி போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
அப்போது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும், அதில் மனமுடைந்து அஜித் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story