திருத்தணியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 102 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்; 4 பேர் கைது

திருத்தணியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு உரிய ஆவணமின்றி 102 டன் நெல் மூட்டைகளை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல் மூட்டைகள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு நெல் மூட்டைகள் கடத்தப்படுவதாக உணவு பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அவர்கள் திருத்தணி அருகில் உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திராவுக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு 4 லாரிகள் வந்தன. அதனை சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி நெல் மூட்டைகள் ஆந்திராவிற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.
4 பேர் கைது
இதையடுத்து 102 டன் எடை கொண்ட நெல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த நிலையில், நெல் மூட்டைகளை கடத்திய வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, திருப்பதி, பொன் சரவணன் மற்றும்திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் யார்? எதற்காக தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு நெல் கடத்தப்பட்டது? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக உணவு பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story