மனிதநேய ஜனநாயக கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல். கியாஸ் விலை உயர்வை கண்டித்து வேதாரண்யம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆட்டோ, சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாட்டு வண்டியில் வைத்து இழுத்து சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை கடைத்தெருவில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஷேக் அகமதுல்லா தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் முகமது காசிம் முன்னிலை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஆட்டோ மற்றும் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதை மாட்டு வண்டியில் வைத்து இழுத்து சென்றனர். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story