பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை முத்துக்கடையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை)
ராணிப்பேட்டை முத்துக்கடையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராணிப்பேட்டை முத்துக்கடையில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத் தலைவர் நாசே. ராமச்சந்திரன், ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ, மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர், மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விறகு அடுப்புகளுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகளும், அணிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story