திருக்கடையூர் அருகே, கண்ணங்குடி கிராமத்தில் ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் - அதிகாரிகள் கவனிப்பார்களா?


திருக்கடையூர் அருகே, கண்ணங்குடி கிராமத்தில் ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் - அதிகாரிகள் கவனிப்பார்களா?
x
தினத்தந்தி 11 July 2021 5:12 PM IST (Updated: 11 July 2021 5:12 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அருகே கண்ணங்குடி கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் ஆபத்தான நிலையில் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருக்கடையூர்,

திருக்கடையூர் அருகே கண்ணங்குடி வடக்கு தெரு மற்றும் தெற்கு தெரு செல்லும் வழியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அங்கு உள்ள 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும், விளை நிலங்களுக்கும் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் அடிக்கடி மின்கம்பி அறுந்து விழுந்து வருகிறது. டிரான்ஸ்பார்மரை தாங்கும் கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்துள்ளது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் டிரான்ஸ்பார்மர் கீழே விழும் ஆபத்து உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கம்பத்தில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை கவனித்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story