இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி உயிரிழந்த பெண் மயில் மீட்பு

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி உயிரிழந்த பெண் மயில் மீட்பு
x
தினத்தந்தி 11 July 2021 5:15 PM IST (Updated: 11 July 2021 5:15 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் என்ஜினில் சிக்கி மயில் உயிரிழந்தது.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் என்ஜினில் சிக்கி மயில் உயிரிழந்தது.

கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 10.20 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய 2-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. 

அப்போது ரோந்துப்பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பகுதியில் பெண் மயில் ஒன்று அடிபட்டு உயிரிழந்து சிக்கியிருந்ததை கண்டனர். விரைந்து சென்று உயிரிழந்த பெண் மயிலை மீட்டு ரெயில்வே போலீசுக்கு எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த பெண் மயிலை மீட்டு எடுத்துச் சென்று குழி தோண்டி புதைத்தனர்.

Next Story