பஞ்சரான டிப்பர் சக்கரத்தை கழற்றிய போது தலையில் கம்பி அடித்து டிரைவர் பலி


பஞ்சரான டிப்பர் சக்கரத்தை கழற்றிய போது தலையில் கம்பி அடித்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 11 July 2021 5:27 PM IST (Updated: 11 July 2021 5:27 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே பஞ்சரான டிப்பர் சக்கரத்தை கழற்றிய போது தலையில் கம்பி அடித்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

நன்னிலம்,

மயிலாடுதுறை அருகே உள்ள ஆனதாண்டவபுரம் ராதாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சவுரிராஜன். இவருைடய மகன் சீத்தாராமன்( வயது38). டிராக்டர் டிரைவரான இவர் சம்பவத்தன்று டிராக்டரில் டிப்பரை மாட்டி எடுத்துக்கொண்டு தேவூர் கிராமத்துக்கு சென்றார். அப்போது வழியில் டிப்பர் டயர் பஞ்சரானது. இதை சரி செய்ய டயரை சீத்தாராமன் கழட்டினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டயர் கழன்று டயர் மற்றும் டயரில் இருந்த லிவர் கம்பி சீத்தாராமன் தலை மீது அடித்தது. இதில் படுகாயமடைந்த சீத்தாராமன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சீத்தாராமன் பரிதாபமாக இறந்தாா். இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story