ஞாயிறு ஆராதனைகள்
கொரோனா ஊரடங்கில் தளர்வுகளின்படி உடுமலை கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் நடந்தது.
உடுமலை
கொரோனா ஊரடங்கில் தளர்வுகளின்படி உடுமலை கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் நடந்தது.
கிறிஸ்தவ தேவாலயங்கள்
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அதன்படி வழிபாட்டு தலங்களை திறந்து வழிபட அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. அதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கிறிஸ்தவ தேவாலயங்கள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் ஊரடங்கில் அடுத்தடுத்து கூடுதல் தளர்வுகளை வழங்கி வருகிறது.
அதன்படி கடந்த 5ந் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறந்து பக்தர்கள் வழிபடுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து உடுமலையில் கடந்த 5ந் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் உடுமலையில் கிறிஸ்தவ ஆலயங்கள் திறக்கப்பட்ட பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு ஆராதனை நடந்தது.
சமூக இடைவெளி
உடுமலை தளி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தில் சேகர குருவானவர் ரெவரெண்ட் எஸ்.ஆனந்தன் ஜெபம் செய்து ஆராதனையை நடத்தினார். இந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியை கடைபிடித்திருந்தனர்.
இதேபோன்று உடுமலை பழனி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் ஞாயிறு ஆராதனை நடந்தது. உடுமலை தளிசாலையில் உள்ள அருள்நிறை அற்புத அன்னை ஆலயம், வி.வி.லே-அவுட் பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் ஆகிய கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு திருப்பலி நடந்தது.
நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் நடந்த ஞாயிறு ஆராதனை மற்றும் ஞாயிறு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர்.
---
Related Tags :
Next Story