திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நகர பஸ்கள் - கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நகர பஸ்களை கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
திருவாரூர்,
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நகர பஸ்களில் செல்ல பெண்களுக்கு இலவசம் என்ற திட்டம் திருவாரூர் மாவட்டத்திலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய வழித்தடங்கள் நகர பஸ்கள் இயக்கம், பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக புறநகர பஸ்களை நகர பஸ்களாக மாற்றம் செய்து இயக்கி வைக்கப்பட்டது.
மேலும் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்ட வழிதடத்திலும் பஸ் இயக்கப்பட்டன. கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து பஸ்களை தொடங்கி வைத்தனர். இதில் புதிய வழிதடமாக திருவாரூர்-அடவங்குடி, திருவாரூர்-நீடாமங்கலம் ஆகிய 2 பஸ்கள் இயக்கப்பட்டன. புறநகர் பஸ்களை நகர பஸ்களாக மாற்றம் செய்யப்பட்டு திருவாரூர்-கோட்டூர், திருவாரூர்-நாகலூர், திருவாரூர்-நாகப்பட்டினம், திருவாரூர்- திட்டச்சேரி, திருவாரூர்-மோகனூர் ஆகிய 5 பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இயக்கப்பட்டன. மேலும் நிறுத்தப்பட்ட மன்னார்குடி-குடவாசல் வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது.
மேலும் திருவாரூர் பழைய பஸ் நிலையத்துக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நகர பஸ் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நேற்று முதல் பஸ் சேவை தொடங்கியது. இதில் அரசு போக்குவரத்து கழக நாகை மண்டல பொது மேலாளர் மகேந்திரகுமார், ஒன்றியக்குழுத்தலைவர் தேவா, துணை மேலாளர் (தொழில்நுட்பம்) சிதம்பரகுமார், துணை மேலாளர் (வணிகம்) ராஜா, உதவி கலெக்டர் (பொறுப்பு) கீதா, நகராட்சி ஆணையர் பிரபாகரன், தாசில்தார் நக்கீரன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story