9 ஆயிரம் கோவிஷீல்டு மருந்துகள் வந்தன


9 ஆயிரம் கோவிஷீல்டு மருந்துகள் வந்தன
x
தினத்தந்தி 11 July 2021 5:54 PM IST (Updated: 11 July 2021 5:54 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. அதனால் நாளை (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. அதனால் நாளை (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

கொரோனா தடுப்பூசி

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் 11 இடங்களில் நிரந்தர தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அதைத்தவிர நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் இதுவரை சுமார் 3½ லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

9 ஆயிரம் தடுப்பூசிகள் 

வேலூர் மாவட்டத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 3,200 தடுப்பூசி மருந்துகள் வந்தன. அவை அனைத்தும் கடந்த 9-ந் தேதியுடன் தீர்ந்து விட்டன. அதனால் நேற்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது.

இதனால் தடுப்பூசி போடச்சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு இன்று 9 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துகள் வந்தன. அவை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

நாளை (திங்கட்கிழமை) முதல் நிரந்தர தடுப்பூசி முகாம்கள், சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் வழக்கம்போல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story