சாலையை பயன்படுத்தும் மதுப்பிரியர்கள்


சாலையை  பயன்படுத்தும் மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 11 July 2021 6:09 PM IST (Updated: 11 July 2021 6:09 PM IST)
t-max-icont-min-icon

திறந்த வெளிபாராக சாலையை பயன்படுத்தும் மதுப்பிரியர்கள்

தாராபுரம்
டாஸ்மாக் கடைகள் கொரோனா தொற்று காரணமாக கடந்த 54 நாட்களுக்கு பிறகு கடந்த 5ந் தேதி முதல் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் பார்கள் மட்டும் திறக்கப்படவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு அதன் அருகிலேயே திறந்த வெளியில் ரோட்டிலேயே அமர்ந்து மதுகுடிக்கின்றனர். மேலும் போதை அதிகமாகி ரோட்டிலேயே படுத்து கிடக்கின்றனர்.
தாராபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நகர் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் மதுப்பிரியர்கள் அதன் அருகில் உள்ள பெட்டிக் கடையில் பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி அருகில் திறந்த வெளியில் மது குடிக்கின்றனர். இதனால் காலை, மாலை இரு வேளைகளிலும் பஸ்சில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மாற்று வழியில் செல்கின்றனர். அப்பகுதியை கடந்து செல்வதற்கு பெண்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மதுப்பிரியர்களால் பிளாஸ்டிக் டம்ளர்கள் இப்பகுதியில் தேங்கிக் கிடக்கின்றது. பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. மேலும் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் டம்ளர்களை விற்கும் அருகிலுள்ள கடைக்காரர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
===============

---
படம் உள்ளது
=========

Next Story