நிவாரண உதவி
மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி
தளி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சமவெளிப்பகுதிக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த சூழலில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஆனாலும் கொரோனா அச்சம் காரணமாக சமவெளி பகுதிக்கு வருவதை மழை வாழ்மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் பூச்சக்கொட்டாம்பாறை, ஆட்டுமலை, பொறுப்பாறு மலைவாழ் குடியிருப்பைச்சேர்ந்த 200 பேருக்கு அரிசி, துணிகள், மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்குவதற்கு காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் கலந்துகொண்டு மலைவாழ் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார். மேலும் வனப்பகுதியில் வெளிநபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறை, நக்சல்தடுப்பு மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கை வைத்தியம் பார்க்காமல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுரை வழங்கப்பட்டது அப்போது இன்ஸ்பெக்டர்கள் ரவி நக்சல் தடுப்பு, கவிதாலட்சுமி தளி, சப்இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்ளிட்ட வனத்துறையினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story