சாலையோரம் பிணமாக கிடந்த தொழிலாளி


சாலையோரம் பிணமாக கிடந்த தொழிலாளி
x
தினத்தந்தி 11 July 2021 7:21 PM IST (Updated: 11 July 2021 7:21 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே ரத்த வெள்ளத்தில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

காங்கேயம்
காங்கேயம் அருகே ரத்த வெள்ளத்தில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். 
பிணமாக கிடந்த தொழிலாளி 
 காங்கேயம் கணேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 42. இவர் கட்டிட கூலி வேலை செய்து வந்தார். இவருடைய  மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர்   நீண்ட நீரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். 
இந்த நிலையில் நேற்று அதிகாலை காங்கேயம்- கரூர் சாலையில் உள்ள முத்தூர்  பிரிவு அருகே 40 வயது மதிக்க ஒருவர் பிணமாக  ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். 
கொலையா
இது குறித்து  காங்கேயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  பின்னர் இறந்தவர் யார் எந்த ஊரைசேந்தவர் என்று விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் செந்தில்குமார் என்று தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு   பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது வாகனம் மோதி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

----
Reporter : R. Uthayakumar  Location : Tirupur - Dharapuram - Kangeyam

Next Story