ஸ்ரீவைகுண்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலைமறியல்
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திறப்பு விழா கல்வெட்டு அகற்றப்பட்டதை முன்னிட்டு, அ.தி.மு.க.வினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திறப்பு விழா கல்வெட்டு அகற்றப்பட்டதை முன்னிட்டு, அ.தி.மு.க.வினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினர் சாலைமறியல்
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது அலுவலக முகப்பில் வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டில், ‘கடந்த 2001-ம் ஆண்டு அப்போதைய எம்.எல்.ஏ. சண்முகநாதனால் திறந்து வைக்கப்பட்டது’ என்று எழுதப்பட்ட கல்வெட்டை அகற்றியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அ.தி.மு.க.வினர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் தலைமையில் நேற்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கல்வெட்டை அகற்றியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர் காசிராஜன், நகர செயலாளர் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
உடனே ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலக முகப்பில், பழைய கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டது.
பின்னரும் அ.தி.மு.க.வினர் கலைந்து செல்லாமல், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட அ.தி.மு.க. வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
Related Tags :
Next Story