திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.350-க்கு விற்பனை


திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.350-க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 July 2021 8:04 PM IST (Updated: 11 July 2021 8:04 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முருகபவனம்:
திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு சுற்றுப்புற பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கு நாள்தோறும் வரத்து, தேவையை பொறுத்து பூக்களின் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். 
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ கிலோ ரூ.200-க்கு விற்பனை ஆனது. இந்தநிலையில் நேற்று மல்லிகைப்பூ விலை சற்று அதிகரித்து கிலோ ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஜாதிப்பூ கிலோ ரூ.220, கனகாம்பரம் ரூ.200, முல்லை ரூ.150, செண்டுமல்லி ரூ.60, ரோஜா ரூ.90-க்கு விற்பனையானது. 
கொரோனா ஊரடங்கு தளர்வுகளால் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களும் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

Next Story