லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு


லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 11 July 2021 8:42 PM IST (Updated: 11 July 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கூடலூர்: 


தண்ணீர் குறைப்பு 
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

ஒரு ஜெனரேட்டர் மூலம் வினாடிக்கு 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இங்கு கடந்த வாரம் 4 ஜெனரேட்டர்களில் இருந்து வினாடிக்கு 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 

தற்போது தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையின் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பாசனத்திற்கு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,711 கனஅடியில் இருந்து 1,200 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. 

மின் உற்பத்தி பாதிப்பு 
இதனால் லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 3 ஜெனரேட்டர்கள் மூலம்தான் மின்சாரம் உற்பத்தி நடைபெற்று வருகிறது.  2 ஜெனரேட்டர்களில் வினாடிக்கு தலா 84 மெகாவாட் உற்பத்தியும், மற்றொரு ஜெனரேட்டரில் வினாடிக்கு 24 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியும் ஆக  மொத்தம் 108 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நேற்று நீர் மட்டம் 126.55 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,203 கனஅடி, வெளியேற்றம் வினாடிக்கு 1,200 கன அடியாக உள்ளது.  

மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விவரம் வருமாறு(மில்லி மீட்டரில்):-பெரியாறு- 17.2, தேக்கடி- 9.8.

Next Story