அரூரில் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அரூரில் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 July 2021 8:59 PM IST (Updated: 11 July 2021 8:59 PM IST)
t-max-icont-min-icon

அரூரில் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரூர்: 

ராணுவ வீரர்
தர்மபுரி மாவட்டம் அரூர் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் மாயவன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சத்யா (வயது 30). இவர் கடந்த 8-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் அம்பேத்கர் நகரில் உள்ள உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சத்யா மீண்டும் வீடு திரும்பினார். அப்போது  பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.
வலைவீச்சு
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சத்யா அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story