மருத்துவ பரிசோதனை
ஜிகா வைரசை தடுப்பதற்காக தமிழககேரள எல்லையான ஒன்பதாறு சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தளி
ஜிகா வைரசை தடுப்பதற்காக தமிழககேரள எல்லையான ஒன்பதாறு சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஜிகா வைரஸ்
தமிழகத்தில் கடந்த மாதம் வரையிலும் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தற்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டு, சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் கொரோனா 3வது அலை வரும் என்றும், கொரோனாவின் திரிபு பாதிப்பை ஏற்படு்த்தும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலால் மக்களிடம் அச்சம் நெஞ்சை விட்டுஅகலவில்லை.
இந்த நிலையில் பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதுடன் ஜிகா வைரசும் பொதுமக்களை மிரட்டி வருகிறது.
அதைத்தொடர்ந்து தமிழககேரள எல்லை ஓரங்களில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தமிழககேரள எல்லையான ஒன்பதாறு மற்றும் சின்னாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். கேரளாவில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இபாஸ் பெற்று உள்ளனரா என்றும் சோதனை செய்து வருகின்றனர். ஆனாலும் சுகாதாரத்துறையினரின் பரிசோதனை இல்லாததால் நோய்த்தொற்று தமிழகத்திற்குள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
நடவடிக்கை
இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டு உள்ளதால் கொரானா பாதிப்பு உள்ளவர்கள் கூட தொற்றை மறைத்து சான்றிதழ் பெற்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அது சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தால் மட்டுமே தெரிய வரும். வனத்துறையினரால் கண்டறிய முடியாது. கொரோனா முதல் அலையின் போது ஒன்பதாறு சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 2ம் அலையின் போது அங்கு எந்தவித பரிசோதனையும் சுகாதாரதுறையினர் மேற்கொள்ளவில்லை. இதனால் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமங்கள் வரையிலும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியது.
தற்போது கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் கேரளாவில் பரவி வருகிறது. உடுமலை-மூணாறு சாலை வழியாக வருகின்ற வாகன ஓட்டிகள் மூலமாக எளிதில் தமிழகத்துக்குள் பரவுவதற்கான சூழல் நிலவுகிறது. எனவே நோய் பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுகாதாரத்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை பெற்று வருகின்ற வாகன ஓட்டிகளை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தொற்று அறிகுறியோடு வரும் நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் தொற்று பரவலை தவிர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
Related Tags :
Next Story