மரக்கன்றுகள் நடும் விழா


மரக்கன்றுகள் நடும் விழா
x
தினத்தந்தி 11 July 2021 9:19 PM IST (Updated: 11 July 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தொண்டி, 
திருவாடானை தாலுகா பாண்டுகுடியில் விடியல் அறக்கட்டளை சார்பில் பசுமை கிராமம் திட்டத்தின்கீழ் காட்டுக்கருவேல முட் செடிகள் மண்டிக்கிடந்த இடங்களை சுத்தம் செய்து பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் வடக்கு குடியிருப்பில் மருத நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை ஊராட்சி  தலைவர் வக்கீல் சிங்கத்துரை தொடங்கி வைத்தார்.  75-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. 
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் மலைராஜ், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மகாலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் விஜயேந்திரன், விடியல் அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், சமூக ஆர்வலர்கள் கோபால், பாஸ்கரன், ராஜ சரவணன், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story