பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2021 9:39 PM IST (Updated: 11 July 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பம்: 

கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். நகர பொதுச் செயலாளர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். 

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் பாண்டியன், கோட்ட அமைப்பு செயலாளர் செந்தில்குமார் ஆகியோர்  கலந்துகொண்டு பேசினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி வரும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டித்தும், 

பிரதமர் மோடியை அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பயங்கரவாதத்திற்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதில் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story