பழனி அருகே கொய்யாப்பழங்களை குப்பையில் கொட்டி சென்ற விவசாயிகள்


பழனி அருகே கொய்யாப்பழங்களை குப்பையில் கொட்டி சென்ற விவசாயிகள்
x
தினத்தந்தி 11 July 2021 9:43 PM IST (Updated: 11 July 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே விலை வீழ்ச்சியால் கொய்யாப்பழங்களை விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்றனர்.

பழனி:
பழனியை அடுத்துள்ள பழைய ஆயக்குடி பகுதியில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சாகுபடியாகும் கொய்யாப்பழங்கள் திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கும், கேரளா மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. 
மேலும் ஆயக்குடி கொய்யா சந்தையிலும் விவசாயிகள் பழங்களை விற்பனை செய்கின்றனர். இங்கு 20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கொய்யாப்பழங்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த்து. 
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு தளர்வால் ஆயக்குடி கொய்யா சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆயக்குடி சந்தையில் கொய்யாப்பழங்களை கொள்முதல் செய்ய போதியளவு வியாபாரிகள் வராததால் 20 கிலோ எடை கொண்ட ஒருபெட்டி கொய்யாப்பழங்கள் ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைந்தனர். 
மேலும் பறிக்கும் கூலிக்கு கூட விலை கட்டுப்படி ஆக வில்லை என்று கூறி தாங்கள் கொண்டு வந்த கொய்யாப்பழங்களை கவலையுடன் குப்பையில் கொட்டி சென்றனர்.

Next Story