குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிப்பு


குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 11 July 2021 10:05 PM IST (Updated: 11 July 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

தொண்டி, 
தொண்டி பேரூராட்சி பெருமானேந்தல், புதுக்குடி, புடனவயல், கோடி வயல், நவக்குடி, திருநகர் போன்ற கிராமங்களில் சுமார் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமங்களுக்கு தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. எனவே குழாய் அமைக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து பேரூராட்சி உதவி இயக்குனர், செயல் அலுவலரிடம் பலமுறை நேரிலும் தபால் மூலமும் புகார் செய்தும் இதுநாள்வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் தொண்டி பேரூராட்சி முன்னாள் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அசோக்குமார் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார்.

Next Story