காளையார்கோவில்,
காளையார்கோவில் நகர் வர்த்தக சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம் காளையார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கஸ்தூரி குருநாதன், பாண்டியராஜன், மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து கொரோனா தடுப்பூசி போடும் முகாமை 2-வது முறையாக நகர் வர்த்தக சங்க கட்டிடத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். நகர் வர்த்தக சங்க தலைவர் ஜேம்ஸ் தலைமையில் மாவட்ட இணைச் செயலாளர் முத்துச்சாமி, செஞ்சிலுவை சங்க சேர்மன் தெய்வீக சேவியர், செயலர் அலெக்சாண்டர் துரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகாமில் 445 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வர்த்தக சங்க செயலாளர் செந்தில்குமார்,பொருளாளர் ஷாஜகான், செஞ்சிலுவை சங்க பொருளாளர் ராமநாதன், துணைத்தலைவர் ஆரோக்கியசாமி, துணை சேர்மன் நாகராஜ் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.