மீனவர் கொலை வழக்கில் தந்தை-மகன் கைது
வேளாங்கண்ணி அருகே மீனவர் கொலை வழக்கில் தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே மீனவர் கொலை வழக்கில் தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
மீனவர்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளையன். இவருடைய மகன் வெற்றி செல்வன் (வயது 29). மீனவர். இவருடைய மனைவி இளமதி. வெற்றிசெல்வன் நேற்று முன்தினம் செருதூர் பாலம் அருகில் மீன் இறங்கு தளம் அருகே வலைகளை சீர் செய்து கொண்டிருந்தார். அங்கு அதே பகுதியை சேர்ந்த உறவினரான செல்வகுமார் (45) மற்றும் அவரது மகன் சரவணன் (19), உறவினர் வினோத் ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது வெற்றிச்செல்வனிடம் தனக்கு தரவேண்டிய ரூ.25 ஆயிரத்தை செல்வகுமார் கேட்டுள்ளார். அதற்கு அவர் இப்போது பணம் தரமுடியாது என கூறியுள்ளார். இதனால்அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
உருட்டு கட்டையால் தாக்குதல்
அப்போது அருகில் நின்றுகொண்டிருந்து செல்வகுமாரின் உறவினர் வினோத் தனது கையில் வைத்திருந்த உருட்டு கட்டையால் வெற்றிசெல்வத்தின் தலையில் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வெற்றிசெல்வன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தந்தை-மகன் கைது
இதுகுறித்து புகாரின்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் மற்றும் அவரது மகன் சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story