கொரடாச்சேரி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு மின் துண்டிப்பை சரிசெய்ய முயன்றபோது பரிதாபம்
கொரடாச்சேரி அருகே மின் துண்டிப்பை சரி செய்ய முயன்ற எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
கொரடாச்சேரி:-
கொரடாச்சேரி அருகே மின் துண்டிப்பை சரி செய்ய முயன்ற எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
எலக்ட்ரீசியன்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள மேலப்பருத்தியூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது30). எலக்ட்ரீசியன். நேற்று மாலை மேலப்பருத்தியூர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு மின் துண்டிப்பு ஏற்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பழுதை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் வரமாட்டார்கள் என நினைத்து மின் துண்டிப்பை சரி செய்வதற்காக ராஜேஷ் டிரான்ஸ்பார்மரில் ஏறினார்.
அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் ராேஜஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் தொங்கியபடி இருந்த அவருடைய உடலை கீழே இறக்கி, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் ராஜேஷின் உடலை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேசுக்கு திருமணம் ஆகவில்லை.
கிராமத்தில் ஏற்பட்ட மின் துண்டிப்பை சரி செய்ய முயன்றவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story