முத்துப்பேட்டை அருகே அரசியல் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் கைது


முத்துப்பேட்டை அருகே அரசியல் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2021 11:04 PM IST (Updated: 11 July 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே அரசியல் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டை அருகே அரசியல் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

வளரும் தமிழகம் கட்சி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆரியலூர் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரஜினி பாண்டியன் (வயது45). இவர் வளரும் தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் ரஜினி பாண்டியனை கடந்த 9-ந் தேதி இரவு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. கொலை தொடர்பாக எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ் (26), மகாதேவன் (22), பிரதீப் (23), சம்பத் (27), கார்த்திகேயன் (43), சிதம்பரம் (57), ஆனந்த் (23) ஆகிய 7 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் ரஜினிபாண்டியன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்தனர். 

ஒருவரிடம் விசாரணை

இதில் ஆனந்த் தவிர மற்ற 6 பேரையும் தஞ்சை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அங்கு உள்ள கிளை சிறையில் அடைத்தனர். வழக்கு தொடர்பாக ஆனந்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். விசாரணை முடிவில் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story