தேவர்சோலையில் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


தேவர்சோலையில் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 11 July 2021 11:08 PM IST (Updated: 11 July 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலையில் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கூடலூர்

கூடலூர் அருகே தேவர்சோலை, பாடந்தொரை பஜாரில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என பேரூராட்சி செயல் அதிகாரி நாகராஜன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது சில கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவு தின்பண்டங்கள் பொதிந்து வைத்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அப்போது செயல் அதிகாரி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது. 

அவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதேபோல் ஓவேலி பேரூராட்சி சூண்டி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. 

அப்போது சிலர் முகக்கவசம் இன்றி பொது இடங்களில் நடந்து செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப் பட்டது.


Next Story