கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு சிறப்பு திருப்பலி


கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 11 July 2021 11:24 PM IST (Updated: 11 July 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்விற்கு பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

காளையார்கோவில்,

கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோ னா தொற்று குறைந்ததால் படிப்படியாக தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்கலாம் என அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த 9-ந்தேதி மசூதி, பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் ஊரடங்கு தளர்விற்கு பிறகு முதன் முறையாக கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது. இதையொட்டி முககவசம் அணிந்த கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கிருமிநாசினியை கைகளில் தெளித்து கொண்டனர். ஆலயத்தில் சமூக இடைெவளியை பின்பற்றி பிரார்த்தனை செய்தனர்.
காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தின் நுழைவுவாயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவை நேற்று பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் அர்ச்சித்து திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் ெகாரோனா விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொண்டனர். கொரோனா நோய் முற்றிலும் இந்த உலகை விட்டு நீங்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டனர்.


Next Story