தென்னை மரத்தில் கூடுகட்டியுள்ள தூக்கணாங்குருவிகள்


தென்னை மரத்தில் கூடுகட்டியுள்ள தூக்கணாங்குருவிகள்
x
தினத்தந்தி 11 July 2021 11:30 PM IST (Updated: 11 July 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

தென்னை மரத்தில் தூக்கணாங்குருவிகள் கூடுகட்டியுள்ளது.

வடகாடு:
வடகாடு பகுதிகளில் ஆற்றங்கரை மற்றும் குளக்கரை வயல் வரப்பு ஓரங்களில் உள்ள பனைமரம் மற்றும் கருவேல மரங்களிலேயே அதிக அளவில் தூக்கணாங்குருவிகள் மிக நேர்த்தியாக கூடு கட்டி வாழ்ந்து வருவது வழக்கம். ஆனால் வடகாடு அருகேயுள்ள ஆற்றங்கரை ஓரமாக அபூர்வமாக தென்னை மரம் ஒன்றில் தூக்கணாங்குருவிகள் கூடு கட்டி உள்ளன. தென்னை மரத்தில் முதிர்ந்த மட்டைகள் உதிர்ந்து விடுவது வழக்கம். ஆனாலும் அச்சமின்றி தென்னை மரத்தில் தூக்கணாங்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story