லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 12 July 2021 12:17 AM IST (Updated: 12 July 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

குழித்துறை:
கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
வாகன சோதனை
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டம் வழியாக ரேஷன் பொருட்கள் கேரளாவுக்கு கடத்தி செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வருவாய்துறையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது, மார்த்தாண்டம் சந்திப்பு காந்தி மைதானம் பகுதியில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், லாரியில் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, போலீசார் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில், அவர் கருங்கல் அருகே திப்பிரமலையை சேர்ந்த சதீஷ் (வயது 26) என்பதும், ரேஷன் அரிசியை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் டிரைவர் சதீஷை கைது செய்தனர்.

Next Story