டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 12 July 2021 12:18 AM IST (Updated: 12 July 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

வேலாயுதம்பாளையம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம்
டாஸ்மாக் மேற்பார்வையாளர் 
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 51). இவர் காகிதபுரம் பேரூராட்சி, மூலிமங்கலம் பிரிவு சாலையில் உள்ள டாஸ்மாக்கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்தவுடன் பாஸ்கரன் டாஸ்மாக் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இ்தையடுத்து நேற்று காலை வழக்கம்போல் பாஸ்கரன் டாஸ்மாக் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. 
மதுபாட்டில்கள் திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது டாஸ்மாக்கடையில் இருந்த 10 மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் தலைமையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டாஸ்மாக்கை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 
வலைவீச்சு
இந்த திருட்டு குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் பாஸ்கரன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து, மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
=======

Next Story