மனைவியை பிளேடால் காயப்படுத்திய ஆட்டோ டிரைவர் கைது
மனைவியை பிளேடால் காயப்படுத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகன்யா (29). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று ஆறுமுகத்திற்கும், சுகன்யாவிற்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், சுகன்யாவை தகாதவார்த்தையால் திட்டி பிளேடால் உடலில் பல்வேறு இடங்களில் கிழித்து காயப்படுத்தி உள்ளார். இதனால் காயம் அடைந்த சுகன்யா கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story