நெல்லையில் சூறைக்காற்றுக்கு மரக்கிளைகள் முறிந்தன
நெல்லையில் பலத்த சூறைக்காற்றுக்கு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
நெல்லை:
நெல்லையில் பலத்த சூறைக்காற்றுக்கு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
சூறைக்காற்று
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசான காற்றுடன், மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் கூரை வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மரக்கிளைகள் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. மேலும் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளும் சாய்ந்து விழுந்தன.
சூறைக்காற்றால் மண், புழுதி வாரி இறைக்கப்பட்டது. இதனால் சாலையில் வாகனங்களில் செல்வோர், வாகனம் ஓட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதுதவிர காற்றின் வேகத்தால் மின்கம்பிகள் உரசி ஒருசில இடங்களில் மின்தடைகளும் ஏற்பட்டன.
மின்வாரியம் எச்சரிக்கை
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது தென்மேற்கு பருவக்காற்று காலமாக இருப்பதால் உயர்ந்த மற்றும் குறைந்த மின்னழுத்த மின்பாதை செல்லும் கம்பிகளின் கீழே வாகனங்களை நிறுத்தக்கூடாது. மேலும் மின் கம்பிகளின் கீழே நின்று பேசுவதையும் தவிர்ப்பது மிகுந்த பாதுகாப்பாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் காற்றின் வேகத்தால் மின்கம்பிகள் ஒன்றுக்கொன்று உரசி அல்லது அருகில் வரும்போது போதிய இடைவெளி இல்லாமல் (பியூஸ் போய் விடுதல்) மின்தடை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதை மின் ஊழியர்கள் உடனுக்குடன் சரிசெய்வார்கள்’’ என்றனர்.
Related Tags :
Next Story