புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு
ஜிகா வைரஸ் எதிரொலியாக புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்றது.
செங்கோட்டை:
தமிழக-கேரள எல்லையான புளியரையில் கொரோனா மருத்துவ சோதனை சாவடி முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் சுகாதார பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் ஜிகா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதன் காரணமாக புளியரையில் சுகாதார துறையினர் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனம் மற்றும் இ.பாஸ் மூலம் வரும் பயணிகளுக்கு ஆக்சிஜன் பரிசோதனை, காய்ச்சல், சளி பரிசோதனைகள் செய்து வருகிறார்கள். மேலும் கேரளாவில் இருந்து வரும் கர்ப்பிணிகளுக்கும் தீவிர பரிசோதனை செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story