போலி டாக்டர் கைது
இளம்பிள்ளை அருகே போலி டாக்டர் சிகிச்ைச அளித்ததில் தொழிலாளி இறந்த சம்பவத்தை அடுத்து போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பிள்ளை
இளம்பிள்ளை அருகே போலி டாக்டர் சிகிச்ைச அளித்ததில் தொழிலாளி இறந்த சம்பவத்தை அடுத்து போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி சாவு
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 32), விசைத்தறி தொழிலாளி.
இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் கே.கே.நகர் மாரியம்மன் கோவில் பகுதியில் வீட்டில் கிளினிக் வைத்து நடத்தி வந்த சிவக்குமார் என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் காய்ச்சலுக்கு அவரிடம் ஊசி போட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மணிகண்டனின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் மணிகண்டனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை இறந்துவிட்டார்.
போலி டாக்டர் கைது
இதனிடையே சீனிவாசனுக்கு சிகிச்சை அளித்த சிவக்குமார் போலி டாக்டர் என்றும், அவரை கைது செய்யக்கோரி மகுடஞ்சாவடி போலீசில் மணிகண்டனின் குடும்பத்தினர் புகார் அளித்ததுடன், போராட்டமும் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிவக்குமார் டாக்டருக்கு படிக்க வில்லை என்பதும், அலோபதி டிப்ளமோ படித்துவிட்டு சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது.
உடனே அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய ஊசி, மருந்துகள் மற்றும் சான்றிதழ்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story