பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி திடீர் சாவு


பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி திடீர் சாவு
x
தினத்தந்தி 12 July 2021 1:35 AM IST (Updated: 12 July 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காள மாநிலத்தில் பணியில் இருந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி திடீரென உயிரிழந்தார்.

பாடாலூர்:

ராணுவ அதிகாரி
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, இருங்களூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 43). இவர் 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். இவருக்கு ஜெகதீஸ்வரி (37) என்ற மனைவியும், விஷால்(12), ரித்யான்(9) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
சங்கர், தனது மனைவியின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தில் வீடு கட்டியுள்ளார். அங்கு ஜெகதீஸ்வரி, மகன்களுடன் வசித்து வருகிறார். தற்போது மேற்கு வங்காள மாநிலத்தில் ராணுவத்தில் ஜே.சி.ஓ. அதிகாரியாக பணிபுரிந்து வந்த சங்கர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு காரை கிராமத்துக்கு வந்து விட்டு, சில நாட்களில் மீண்டும் பணிக்கு திரும்பினார்.
சாவு
இந்நிலையில் நேற்று மேற்கு வங்காள மாநிலம் சிக்கிம்- லாச்சுங் பகுதியில் பணியில் இருந்தபோது சங்கருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக ராணுவ அதிகாரிகள் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து சங்கர் உயிரிழந்தது குறித்து சக ராணுவ அதிகாரிகள் அவரது மனைவி ஜெகதீஸ்வரிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதைக்கேட்ட ஜெகதீஸ்வரி குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஊருக்கு கொண்டு வரப்படுகிறது
உயிரிழந்த ராணுவ அதிகாரி சங்கரின் உடலுக்கு ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் இருந்து விமானம் மூலம் இன்று (திங்கட்கிழமை) காரை கிராமத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்படுகிறது. குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு சங்கரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Next Story