ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோவில் கைது
ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோவை
ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
17 வயது சிறுமி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் கிரண்குமார் (வயது 21). ஆம்புலன்ஸ் டிரைவர். இவருடைய நண்பர் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார். அப்போது நண்பரை சந்திக்க சென்ற கிரண்குமாருக்கு, அங்கு வேலை செய்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது கிரண்குமார் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமியின் தந்தை, தன்னுடைய மகளை அழைத்து வர மில்லுக்கு சென்றார். பின்னர் மகளை அழைத்துக்கொண்டு கோவை ரெயில் நிலையம் வந்தார். அங்கு தண்ணீர் பாட்டில் வாங்கிவருவதாக கூறி சென்ற சிறுமி திடீரென மாயமானார்.
கடத்தி திருமணம்
இதுகுறித்து சிறுமியின் தந்தை கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இதற்கிடையில் கிரண்குமார், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று கடந்த 9-ந்தேதி ஒரு கோவிலில் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெள்ளக்கோவிலுக்கு சென்று சிறுமியையும், ஆம்புலன்ஸ் டிரைவரையும் கோவைக்கு அழைத்து வந்தனர்.
போக்சோவில் கைது
பின்னர் சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக கிரண்குமார் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அவினாசி சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story