கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கு கீழ் பதிவு


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கு கீழ் பதிவு
x
தினத்தந்தி 12 July 2021 2:12 AM IST (Updated: 12 July 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.
கர்நாடக சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பரிசோதனைகள்

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 1,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்து 71 ஆயிரத்து 298 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 56 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 835 ஆக உள்ளது.

நேற்று 2,326 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 27 லட்சத்து 98 ஆயிரத்து 703 பேர் குணம் அடைந்து உள்ளனர். 36 ஆயிரத்து 737 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

10 மாவட்டங்களில்...

பெங்களூரு நகரில் 433 பேர், மைசூருவில் 261 பேர், தட்சிண கன்னடாவில் 195 பேர், ஹாசனில் 132 பேர், துமகூருவில் 124 பேர் உள்பட 29 மாவட்டங்களில் 1,978 பேர் பாதிக்கப்பட்டனர். பாகல்கோட்டையில் யாரும் பாதிக்கப்படவில்லை. பெங்களூரு நகரில் 8 பேர், பெலகாவியில் 6 பேர், ஹாசன், கோலாரில் தலா 5 பேர், தார்வாரில் 4 பேர் உள்பட 56 பேர் இறந்தனர். 10 மாவட்டங்களில் புதிதாக யாரும் இறக்கவில்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story