மத்திய மந்திரி பதவி பறிப்பால் எந்த வருத்தமும் இல்லை; சதானந்தகவுடா சொல்கிறார்
மத்திய மந்திரி பதவி பறிப்பால் எந்த வருத்தமும் இல்லை என்று சதானந்தகவுடா சொல்கிறார்.
பெங்களூரு: பெங்களூருவில் முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
நான் மத்திய மந்திரியாக இருந்த போதும், என்னை வரவேற்க ஆதரவாளர்களும், கட்சி தொண்டர்களும் வருவார்கள். தற்போது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பெங்களூருவுக்கு திரும்பிய போதும், விமான நிலையத்தில் திரண்டு இருந்த ஆதரவாளர்கள், தொண்டர்களை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். பா.ஜனதா கட்சி எனக்கு அனைத்து விதமான பதவிகளையும் வழங்கி உள்ளது.
அதனால் என்னிடம் இருந்து மத்திய மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளதால், எந்த விதமான வருத்தமும், ஏமாற்றமும் இல்லை. கட்சி பணியை மேற்கொள்ளும்படி மேலிடத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபடுவேன்.
மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவேன். கட்சி தலைமை வழங்கும் எந்த விதமான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். கட்சி தலைமை வழங்கும் பொறுப்புகளை மனதிருப்தியுடன் செய்வேன். அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவேன். அந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.
Related Tags :
Next Story