கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
அருப்புக்கோட்டை ெரயில்நிலையம் அருகே கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்தன.
அருப்புக்கோட்டை,
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அருப்புக்கோட்டை ெரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரெயில் நிலையம் அருகே உள்ள கருவேல மரங்கள் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. கொஞ்சம் நேரம் கொழுந்து விட்டு எரிந்த தீ தானாக அணைந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ெரயில்நிலையம் பகுதிகளில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story