சூதாடிய 7 பேர் கைது
ஆறுமுகநேரியில் சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ரெயில் நிலைய காட்டுப்பகுதியில் காசு வைத்து சூதாடுவதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் ெரயில் நிலையத்திற்கு வடபுறம் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடி கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில் ஆறுமுகநேரி கணேசபுரத்தை சேர்ந்த முத்துமாலை (வயது 65), ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்த முத்துலிங்கம் (56), எஸ்.எஸ்.கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் லிங்கத்துரை (36), கமலா நேரு காலனியை சேர்ந்த சின்னத்துரை (47), கீழநவ்வலடிவிளை தெருவை சேர்ந்த மூக்காண்டி (67), கீழ சண்முகபுரத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (53), தலைவன்வடலியை சேர்ந்த இளையபெருமாள் (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் 7 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.3500-ஐ பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story