மோடிக்கு எதிராக வடையுடன் போராட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மோடிக்கு வடை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நேற்று மோடிக்கு வடை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு தட்டில் வடை கொண்டு வந்தனர். அந்த வடையை கையில் வைத்துக் கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தக்கோரியும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அந்த வடைகளை தபால் உறைகளில் போட்டு பிரதமருக்கு அனுப்பப்போவதாக கூறினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
இதனால், அவர்கள் போலீசாரை கண்டித்து தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் தமிழ்ப்பெருமாள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story